• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கமாட்டேன் – பசில்

Byadmin

Jan 17, 2019

(ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கமாட்டேன் – பசில்)

ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிட மாட்டேன் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது முதல் தரமான முயற்சி மாகாண சபைத் தேர்தல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே காணப்படுகின்றது. மூன்று மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஒன்றை நடாத்தாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடாகும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றில் கலந்துகொள்வதற்கு வருகை தந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *