• Sat. Oct 11th, 2025

நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?

Byadmin

Jan 22, 2019

(நீரிழிவையும், உடல் எடையையும் குறைப்பதற்கு பாகற்காய் பானம் தயாரிப்பது எப்படி ..?)

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டியது பாகற்காய் தான். இதனை உணவில் சேர்த்துக் கொல்வதனால் உடல் எடை விரைவாக குறைந்து விடுகிறது.

பாகற்காயை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?
பாகாற்காயில் அதிகளவான ஊட்டச்சத்துக்கலும் ஆரோக்கியமும் இருப்பதனால் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் கசப்பு சுவை பிடிக்கவில்லை என்றாலும் அதன் ஊட்டச்சத்துக் காரணமாக அதனை உணவில் சேர்த்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.

பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் சில:

• பாகற்காயில் விட்டமின் சி இருப்பதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது. அத்துடன் இது வைரஸ் தொற்றுக்களிற்கு எதிராகவும் செயற்படும் தன்மை உள்ளது. மேலும் வீக்கத்திற்கு எதிராகவும் செயற்படும். அத்துடன் வயிறு, சிறுகுடலின் ஆரோக்கியத்தைன் அதிகரிக்கச் செய்கின்றது.

• பாகற்காயில் அதிகளவான நார்ப் பொருட்கள் அதிகம் இருப்பதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையோ அல்லது அலசர் உருவாவதையோ தடுக்கின்றது. அத்துடன் வயிற்றில் ஏற்படும் பக்டீரியா தொற்றுக்களை நீக்கவும், நச்சுத் தன்மையையும் வெளியேற்றுகின்றது.

• இது உடலின் கொழுப்பின் அளவைக் குறைப்பதனால் இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

• இதில் போலிபெப்டைஸ் மற்றும் விசின் இருப்பதனால் நீரிழிவு நோயின் போது பயனபடுத்தலாம். இது இன்சுலீன் போன்று செயற்பட்டு இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைத்து விடும்.

• சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாகற்காய் சாப்பிடுவதனால் அது கற்களை உடைக்கச் செய்வதுடன், அது வெளியேறும் போது வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

• இதில் விட்டமின் ஏ இருப்பதனால் கண் பார்வையை மேம்படுத்தும்.

• கணையத்தில் ஏர்படும் கட்டிகளை குணப்படுத்துவதற்கு பாகற்காய் உதவுகின்றது.

• இதில் விட்டமின், கனியுப்பு, நார்ப்பொருட்கள், அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் சருமத்தின் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.

• பாகற்காயின் கசப்பு சுவையை நீக்குவது எப்படி?

• பாகற்காயை சமைக்கும் போது அதன் கசப்பு சுவையைக் குறைப்பதற்காக இரண்டு மணி நேரங்கள் உப்பு நீரில் ஊற வைத்து சமைக்க வேண்டும். இதனால் கசப்பு சுவை அதிகளவில் குறைவதனால் சமையலில் பயன்படுத்தி அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெற முடியும்.

உடல் எடையைக் குறைப்பதற்கான பாகற்காய் பானம்.
பாகற்காய்க்கு குளுக்கோஸ் அளவைக் குறைத்து அதனை சீராக வைத்திருக்கும் தன்மை உள்ளது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தூண்டுவதன் மூலம், இன்சுலீன் சுரப்பதை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் குளுக்கோஸ் அளவு குறைவடைந்து, உடல் எடையைக் குறைத்து விடுகிறது.

அத்துடன் தொடர்ச்சியான உடற்பயிற்சியும் உடல் எடை குறைவதை தூண்டும்.

தேவையான பொருட்கள்:
• பாகற்காய் -1
• செலரி -2 துண்டு.
• ஆப்பிள் -2-3.
• வெள்ளரிக்காய் -1
• தோல் உரிக்கப்பட்ட எலுமிச்சை -1

தயாரிக்கும் முறை:
பாகற்காயை இரண்டாக வெட்டி விதைகளை நீக்கி, மற்றைய பழங்களுடன் சேர்த்து பிளண்டரில் போட்டு அரைத்து பானமாக தயாரித்துக் கொள்ளவும்.

கசப்பு சுவை அதிகமாக இருந்தால் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் சிறிதளவு உப்பையும் தேனையும், மிளகையும் சேர்த்து, குளிரூட்டியில் 2 மணி நேரம் வைத்து பானத்தை அருந்துவது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *