• Fri. Nov 28th, 2025

பாடசாலைகள் சட்டவிரோதமாக பணம் கேட்டால் தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு அழையுங்கள்.

Byadmin

Feb 1, 2019

(பாடசாலைகள் சட்டவிரோதமாக பணம் கேட்டால் தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு அழையுங்கள்.)

வசதிக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை
சட்டவிரோதமாக அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

வசதிக்கட்டணம் மற்றும் சேவைக்கட்டணத்தை அறிவிடும்பொழுது இதற்கு தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளாகள், மாகாண பாடசாலையாயின் மாகாணகல்வி செயலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வவாறு இல்லாதபட்சத்தில் தமது விருப்பத்திற்கமைவாக சுற்றறிக்கையை மீறிய வகையில் பாடசாலை அதிபர்கள் கட்டணங்களை அறிவிட முடியாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால் அறிவிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *