(“தேர்தலுக்கு ஆயத்தமாகவும்” – ரணில்)
தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தயாராகும் படி ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மாவட்ட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராம மட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவர் மாவட்ட தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.