(இலங்கைக்கு 12 புதிய இராஜதந்திரிகள் நியமனம்…)
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய இராஜதந்திரிகள் 12 பேர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(01) கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்லோவாகியா, பெலரஸ், மாலி, ஆர்மீனியா, சால்வடார், கம்போடியா, மாலைத்தீவுகள், இஸ்ரேல், ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் இதன்போது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர்.
கயானா , உகாண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானியர்கள் இன்றைய தினம் தமது நியமனக்கடிதங்களை கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.