( கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுதலை)
தூபியில் ஏறி புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர்களுக்கும் சிரேஷ்ட்ட சட்ட வல்லுனர் ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் இன்று வழக்கில் இருந்து பூரணமாக விடுதலை செய்யபட்டுள்ளனர்.
ஷிராஸ் நூர்தீன் மற்றும் ருஷ்தி ஹபீப், சப்ராஸ் ஹம்சா ஆகியோர் வழக்கில் மாணவர்கள் சார்பில் ஆஜராகி உள்ளனர்.
பிணை வழங்க முடியாதென பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று வாதாடப்பட்டது.
எனினும் கடுமையான வாதப்பிரதிவாதத்தின் மத்தியில் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களின் முயறிசியினால் குறித்த 8 மாணவர்களும் தலா 1000 ரூபா தண்டப்பணத்துடன் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு மாணவர்களின் கைவிரல் அடையாள பதிவை எடுக்கும் முயற்சியையும் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் முறியடித்து வெற்றிகண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.