(இராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு…)
வெயாங்கொட – நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள இராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(04) முற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 47 வயதான, கொட்டுகொடவைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த 13 வயதான அவரின் மகள் சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.