(கஷ்மீர் மக்களுக்கு, நாம் செய்ய வேண்டியது…!)
கஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றொரு பிரம்மையை ஊரெங்கும் நமது ஊடகங்கள் அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டன.
இதனால் இந்தியாவில் இதரப் பகுதிகளில் வாழும் நம் மக்கள் கஷ்மீர் மக்களை வெறுக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால் கஷ்மீரில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. நிலநடுக் கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டிட சமூக ஆர்வலர்கள் முற்பட்டபோது, கன்னடத்து மக்கள் தீவிரவாதிகளுக்கு ஏன் நாங்கள் நிதி தந்திட வேண்டும்? எனக் கேட்டார்கள்.
இப்படியொரு மனநிலை உருவாக்கப்பட்டு விட்டதால் கஷ்மீர் மக்கள் இந்தியாவின் இதர மக்களிடமிருந்து அந்நிய மாக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை அறிவாருமில்லை, ஆதங்கப்படுவாருமில்லை.
நம் நாட்டின் இதர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவர்கள் நாளும் சந்திக்கும் குரூரங்களின் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்லவே வேர்கள் பதிப்பகம் வழி இந்த நூலைக் கொண்டு வந்துள்ளோம். (அல்ஹம்துலில்லாஹ்)
ஆகவே இந்த நூலைப் படிப்பவர்கள், தாங்கள் படிப்பதோடு நிறுத்திவிடாமல் எல்லாக் குடிமக்களுக்கும் கொண்டு சேர்த்திட ஆவன செய்திட வேண்டும். இது எல்லா வகையிலும் அல்லாடும் அந்த மக்களுக்கு நாம் செய்யும் பெருஞ்சேவையாக அமையும்.
இந்த சேவையைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த கஷ்மீர் மக்கள் கருத்தையும் கஷ்மீரில் இராணுவத்தினர் செய்யும் கபளீகரங்களுக்கு எதிராக உருவாகிட வேண்டும். அதன் மூலம் அங்கிருக்கும் இராணுவத்தினர் பின்வாங்கப்பட ஆவன செய்திட வேண்டும்.
படியுங்கள்! பரப்புங்கள்! அந்த மக்கள் இந்தக் கெடுபிடியிலிருந்து விடுபட ஆவன செய்யுங்கள் ⭕💔 கஷ்மீர் துயரங்களை அறிந்துக் கொள்ள:”கஷ்மீரின் பாதி விதவைகள்”தொகுப்பு: மு.குலாம் முஹம்மது M.A.,விலை: 70/-வெளியீடு:வேர்கள் பதிப்பகம் – சென்னைதொடர்புக்கு: 8148129887
🗯 செய்திகளில் மறைக்கப்பட்ட மறுபக்கத்தை அறிந்துக் கொள்ள படியுங்கள்… 🗯”வைகறை வெளிச்சம் மாத இதழ்”ஆசிரியர்: மு.குலாம் முஹம்மது M.A., (மூத்த பத்திரிகையாளர்), நிறுவனர்: விடியல் வெள்ளி, ஆசிரியர்: வைகறை வெளிச்சம் மாத இதழ்👉🏻 தனி இதழ்: 20/-👉🏻 ஆண்டு சந்தா: 240/-தொடர்புக்கு: 8148129887
Vaigarai Velicham Mgm