• Sun. Oct 12th, 2025

2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்

Byadmin

Feb 26, 2019

(2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்)

இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர்.

அப்போது குழந்தைக்கு 2 சதவீத அளவுக்கே மூளை இருந்தது தெரியவந்தது. எனவே கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அந்த தம்பதி அதனை விரும்பவில்லை. 2 சதவீத மூளையுடன் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு நோவா வெல் என பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தை பார்வையின்றி, பேசும் மற்றும் கேட்கும் திறனின்றி வளர்ந்தது.

பின்னர், நோவாவை ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் ஒப்படைத்தனர். 3 வயதுக்குப் பின் நோவாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சையால், அவனது மூளை வளர்ச்சி விகிதம் அதிகமானது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு பார்வை, திரும்பக் கிடைத்தது. தற்போது 6 வயதாகும் நோவாவின் மூளை 80 சதவீத அளவை எட்டி உள்ளது. தொடர் சிகிச்சையின் மூலம் நோவா முழுமையான மூளை வளர்ச்சியை பெற்று சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் மூளையின்றி பிறந்த குழந்தைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உள்ளாகவே இறந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *