(“ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பால்மாக்களில் பன்றி கொழுப்பு இல்லை” HAC உறுதி)
தாய்லாந்து ஹலால் விஞ்ஞான ஆய்வுகூட அறிக்கையை அடிப்டையாக வைத்து ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பால்மாக்களில் பன்றி கொழுப்பு இல்லை என்பதை HAC மீண்டும் உறுதி செய்கின்றது.
நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் கௌரவ புத்திக பத்திரண அவர்களால் பாராளுமன்றத்தில் அறிவிப்பு செய்யப்படதன் விளைவாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியும் குழப்பமும் தொடர்பாக ஹலால் சான்றுறுதி பேரவை தனது நிலையை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஹலால் சான்றுறுதி பேரவையினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பால் மாவில் பன்றி கொழுப்பு கிடையாது என்று உறுதியாக கூறப்பட்ட அறிக்கையை மீள் உறுதிப்படுத்துவதற்காக தாய்லாந்தில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஹலால் விஞ்ஞான ஆய்வுகூட ஆய்வகத்திலிருந்து இரண்டு பரிசோதனை அறிக்கைகளை ஹலால் சான்றுறுதி பேரவை பெற்றுள்ளது.
65 மூ இலங்கை உணவு ஏற்றுமதிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக வருவாயைக் தரக்கூடிய ஹலால் சான்றுறுதி பேரவையின் ஹலால் சான்றிதழ் படுத்தும் முறைக்கு இது போன்ற அதிகாரமுள்ளவர்களினால் கூறப்படும் விடயங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துலாம்.
பால்மாக்களில் பன்றி கொழுப்பு உள்ளது என்று குற்றஞ்சாட்டும் அனைவரிடமும் இது சம்பந்தமாக ஏதும் உறுதியான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் இருந்தால் ஹலால் சான்றுறதி பேரவைக்கு ஒப்படைக்குமாறு ஹலால் சான்றுறதி பேரவை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது. அத்தகைய தகவல்கள் மேலும் ஆய்வு செய்ய ஹலால் சான்றுறுதி பேரவைக்கு உதவும்.