• Sat. Oct 11th, 2025

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது

Byadmin

Feb 28, 2019

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் 
அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்திருந்த நிலையில் 45 விண்ணப்பங்கள் கொடுக்கபட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டவர் ஒருவரும் இதற்காக விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெளிநாட்டவரின் விண்ணப்பம் பரிசீலனைக்கு உட்படுத்தாமலே நிராகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பரிசீலனையின் பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை கோரியிருந்தது.

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 48 பேர் இந் நாட்டு சிறைச்சாலைகளில் இருப்பதுடன் அதில் கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் 17 பேரும் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *