• Wed. Oct 15th, 2025

ஸ்ரீபாதயா? சிவ பாதமா? மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி எடுத்த நடவடிக்கை.

Byadmin

Mar 7, 2019

(ஸ்ரீபாதயா? சிவ பாதமா? மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி எடுத்த நடவடிக்கை.)

மஸ்கெலியா பிரதேச சபையால் ‘ஸ்ரீபாத’ மலைக்கு பிரவேசிக்கும் வாயிலில் ‘சிவபாதம்’ எனப் பெயரிடுவதாக
எடுக்கப்பட்ட முடிவை உடன் இடை நிறுத்தும் படி மத்தியமாகாண ஆளுநர் மைந்திரி குனரத்த உத்தரவிட்டுள்ளார். (7.3.2109)

எந்த ஒரு தரப்பினருடனும் கலந்துரையாடாது மேற்படி பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடன் இடை நிறுத்தும் படியும் அவர் அறிவித்துள்ளார்.

 ஊடகங்கள் மூலம் தாம் இதனைத் தெரிந்து கொண்டதாகவும் அதன் பின் இது விடயமாகத் தேடிப்பார்த்த போது அரச நிறுவனங்கள் அல்லது தொடாபுடைய அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காது தனி முடிவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே உள்ளுராட்சி மாகாண சபை ஆணையாளர் ஊடாக இது விடயமாக மஸ்கெலிய பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த வருடம் தெல்தெனியாவில் இடம் பெற்றது போன்ற இன முரண்பாடுகளை மேலும் மத்திய மதாகாணத்தில் ஏற்படுத்த தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் இவ்வாறு இன முறுகல்ளுக்கு வழி சமைக்கும் விடயங்களில் அவதானம்  வைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்தாலோசித்தே தேவைப்படுமிடத்து மாற்றங்கள் செய்ய முற்படுதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

– ஜே.எம்.ஹபீஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *