(அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு)
நியுஸிலாந்து பள்ளிவாயலினுள் புகுந்து தாக்குதல் நடத்திய அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலை அவுஸ்ரேலியாவின் டெரண்ட் என்பவன் மேற்கொண்ட தகவல் வெளியானதை அடுத்து அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸில் வசித்துவதும் டெரண்டின் தாய் மற்றும் சகோதரி தங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படுமா என அச்சமைடைந்துள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸாரின் கண்காணிப்பில் வீடு ஒன்றில் அவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தான் அறிந்த தனது பேரன் இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடமாட்டான் எனவுன் தனது பேரனின் செயல் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவனது பாட்டி ஜொயிஸ் டெரண்ட் குறிப்பிட்டுள்ளார்.