(தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..)
நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதலின் பிரதான குற்றவாளி டெரண்ட் என்பவன் நியுஸ்லாந்து துப்பாக்கி கழகத்தின் ஒரு உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.
மில்டன் நகரில் உள்ள ரைபல் கிளப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் டெரண்ட் முன்னதாக உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளான்.
தான் பணி புரிந்த இடங்களிலோ அல்லது துப்பாக்கி கழகத்திலோ எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் முஸ்லிம் விரோத பிரசாரங்களில் ஈடுபடவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதே நேரம் அவன் கொலைகளுக்கு பாவித்துள்ள குறித்த ஏர் 15 மற்றும் ஷொட் கண் துப்பாகிகள் அவுஸ்ரேலியாவோ மற்றும் நியுசிலாந்தோ இதுவரை கண்டதில்லை என தெரிவிக்கப்படுகிறது.