• Sun. Oct 12th, 2025

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி

Byadmin

Mar 21, 2019

(சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில்
இன்று (21) இடம்பெற்ற பேச்சுவாரத்தை வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான 2 ஆம் கட்டப்  பேச்சுவார்த்தை, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் இடம்பெற்றது.

இந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான 20 காரணிகள் ​குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்றாம் கட்டப் பேச்சுவார்தைக்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, இவ்விரு கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *