(இலங்கையில் இன்று முதல் செயற்கை மழை)
இலங்கையில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்து இருந்த நிலையில் , குறிப்பாக நீரேந்து பிரதேசங்களாக உள்ள மத்திய மலை நாட்டில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை மழை பொழிய வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் இன்று பகல் இரத்மலான விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு என விமானபடை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விமானம் மஸ்கெலியா, லக்சபான போன்ற இடங்களில் செயற்கை மழை பொழிய வைக்கும் ரசாயன மருந்து தூவப்பட உள்ளது.
தாய்லாந்து நிபுணர்களின் வழி காட்டலில் மேற்படி செயற்கை மழை திட்டம் நடத்தபடுகிறது.