• Sat. Oct 11th, 2025

வீதிகளை காணவில்லை… கண்டுபிடித்து தாருங்கள்! பாராளுமன்றில் காதர் மஸ்தான்

Byadmin

Mar 27, 2019

(வீதிகளை காணவில்லை… கண்டுபிடித்து தாருங்கள்! பாராளுமன்றில் காதர் மஸ்தான்)

2010ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டதாக மீள் குடியேற்ற அமைச்சின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட 
வேப்பங்குளம் தொடக்கம் சிலாவத்துறை வரையிலான பிரதேசங்களின் உள்ளக வீதிகளை கண்டுபிடித்துத் தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான  காதர் மஸ்தான் இன்று பாராளுமன்றத்தில் வேதனையுடன் கோரிக்கை விடுத்தார்.

மீள்குடியேற்றத்தின் பெயரில் முசலி பிரதேச மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் துயரங்களை வேதனையுடன் குறிப்பிட்ட கெளரவ காதர் மஸ்தான் மழை காலங்களில் சிலாவத்துறை இளவன்குளம் காட்டுப்பாதை சேறாகும் நிலைமையால்  ஒயாமடுவ ஊடாக  மக்கள் மூன்று மணிநேரங்களை மேலதிகமாக செலவளித்து பயணம் செய்கின்றனர்.    

இதனால் நேரம் மற்றும் பண விரயத்திற்கு எமது மக்கள் ஆளாகின்றனர்.

மழை காலங்களில் போவீலர் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தி மக்களின் துயர் துடைக்க இந்த அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *