(37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…)
இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையகத்திற்கான சேவையில் ஈடுபடும் புகையிரதங்களுக்கான 75 பயணிகள் பெட்டிகளையும் 20 சரக்கு பெட்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.