(FREE WI-FI வழங்க வந்த அரசு மின்சாரத்தை வழங்காமல் நெருக்க்கடிக்குள் தள்ளியுள்ளது)
பிரீ வைபை வழங்குவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் மக்களுக்குமுறையாக மின்சாரத்தை வழங்காமல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சகுறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டஅவர் ,
இலவச வைபை , மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு கார் எனபல்வேறு வாக்குறுதிகளை வாக்குறுதி அளித்து வந்த இந்த அரசாங்கம்மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கே திண்டாடி வருகிறது.
நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிகத்தமையே மின்வெட்டுக்குபிரதான காராணம் என கௌரவ அமைச்சர் ரவி கருநானாயக்க கூறுகிறார்.
நாட்டில் வருடா வருடம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பது என்பதுசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம்தரப்பு தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். மஹிந்த ராஜபக்ஷஅவர்களின் காலத்திற்கு பின்னர் மின் உற்பத்தி செய்யும் எந்த ஒருதிட்டத்தையும் இந்த அரசு ஆரம்பிக்கவில்லை. பல்வேறு தரப்பினர் முன்வைத்தசூரிய மின் சக்தி திட்ட யோசனைகளையும் இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.
திட்டமிட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.