• Sat. Oct 11th, 2025

20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்

Byadmin

Mar 28, 2019

(20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்)

உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இதனை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். ஆனால் கடந்த 1999-ம் ஆண்டு அவர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவரிடம் இருந்து இந்த ஓவியத்தை திருடி சென்றனர்.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த ஓவியம் நெதர்லாந்தில் கிடைத்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டமை சேர்ந்த கலை துப்பறிவாளரான ஆர்தர் பிராண்ட் என்பவர் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த ஓவியத்தை மீட்டுள்ளார்.

இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பதில் சுமார் ரூ.193 கோடி) இருக்கும் என கூறும் ஆர்தர் பிராண்ட், இந்த ஓவியம் தன் கைக்கு வருவதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக 10-க்கும் மேற்பட்டோரிடம் கை மாறி இருக்கிறது என்றும் கூறினார்.  #PicassoPainting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *