(எதிர்க்கட்சியில் இணைவேன்… ஐ.தே.க பிரதியமைச்சர் மிரட்டல்)
அம்பேபுஸ்ஸ – ஹபரண வீதியின் நிர்மாணப்பணிகளை நிவர்த்தி செய்வதற்காக மேலும் 30 கோடி ரூபா தராத பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவளிப்பேன் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
புகையிரத பாதை பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களை அவதானப்படுத்தும் விதத்தில் அளவ்வ புகையிரத நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதாதையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 2015இல் ஆரம்பிக்கப்பட்ட அம்பேபுஸ்ஸ ஹபரண வீதி வங்கியில் பணம் இல்லை என்ற காரணத்தினால் இடைநிறுத்தப்பட்டது.30 கோடி இல்லாமல் நான் 2015ம் வருடத்திலிருந்து கேட்டு வருகிறேன்.
இம்முறை தேர்தலுக்கு முன்னர் இந்த பாதையின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக பணத்தினை வழங்காத பட்சத்தில் அடுத்த தேர்தலில் எதிரணிக்கு ஆதரவளிப்பேன் என அமைச்சர் கபீர் ஹஷீமிடம் தெரிவித்துள்ளேன் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்