(மருதாணி என்று அழைக்கப்படும் மருதோன்றி இலையின் மகத்துவம்…)
* இலைகளை அறைத்து கை,கால் விரல்களில் காப்பிட்டுக்கொள்ள உடல் வெப்பம் தணியும் ,கண்கள் ஆற்றல் மிகும் ,விரல் ரணங்கள்,அறிப்பு நீங்கும் .
* இலைகளை அறைத்து சாறெடுத்து நல்லெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திவர முடி வளரும் ,கருமையாகும் .
* இலைகளை காய்ச்சி அந்த நீரை வடிகட்டி வாய்கொப்பளிக்க வாய்புண் ஆறும் .
* இலைகளைஅறைத்து பழசாறுடன் கலந்து பாதத்தில் கட்டிவர பாத எரிச்சல்,குதிங்கால்வலி நீங்கும் .
* இலைகளை நெல்லிக்காய்அளவு எடுத்து பசும்பால் விட்டு அறைத்து நன்கு வடிகட்டி காலை வெறும் வயிற்றில் ஒருவேளை மட்டும் மூன்றுநாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவரஅதிமூத்திரம், வெள்ளை,பெறும்பாடு கட்டுப்படும்.
* இதன் விதைகளை பொடியாக்கி சாம்பிராணியுடன் கலந்து தூபம் இட பித்த அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பை மூளை செல்களில் சுத்தப்படுத்தும். இதனால் பில்லி,பேய்,சூன்யம்
பரிகாரத்திற்கு தூபம்இடபயன்படுகிறது.இதை நீங்களே செய்தால் பரிகார செலவு மிச்சம் .
* மருதாணிமர வேர் பகுதியை பஞ்சுபோல நசுக்கி சுத்த தண்ணீரில் இரவு ஊரவைத்து மருநாள் அதை காய்ச்சி பாதியாக வந்தவுடன்
ஆறவைத்து வடிகட்டி தினசரி அதிகாலை வெறும் வயிற்றில் அருந்திவர,சிதைந்த நகம் மீண்டும் வளரும் ..
காமாலை
கல்லடைப்பு
நீரடைப்பு
நீர்குத்தல்
பெண்களுக்கு மாதவிடாய்சிக்கல் நீங்கும் .