• Sat. Apr 4th, 2026

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!

Byadmin

Mar 2, 2026

(உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்..!)

தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும்.

தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்
பால் – 1 ½ கப்
தயிர் – ½ கப்
கேரட் – 1
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

கம்பை புடைத்து சுத்தம் செய்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்த கம்பை மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.

உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பின் கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளிக்கவும்.

அத்துடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

கடைசியாக, உப்பு, துருவிய கேரட், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *