• Sat. Oct 11th, 2025

சிங்கள சமூகத்தில், பேசப்படும் ஸாரா வஸீர் – குவிகிறது பாராட்டுக்கள்

Byadmin

Jun 30, 2017
125,000 ரூபாவை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய ஸாரா வஸீர்!
ஸாரா வஸீர், இவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பதின் ஏழே வயதான ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சகோதரி, இப்போது சகோதர சிங்கள சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு முன்மாதிரி யுவதியாக திகழ்கிறார், facebook இல் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது,
இவர் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது,
சிரச சிங்கள தொலைகாட்சி சேவையில் ஒளிபரப்பாகும் ”ஒபத லக்ஷபதி” (Millionaires) என்கிற நிகழ்ச்சியில் பங்குகொண்டு 125,000 ரூபாவை வென்று முழுத்தொகையையும் இலங்கை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்,
இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும், இதன் மூலம் இயலாதவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்கிற உறுதியான செய்தியை அனைவருக்கும் எத்தி வைத்திருக்கிறார்!
எதிர்கால இலட்சியமாக ஒரு சட்டத்தரணியாக வர வேண்டும் என்கிற அவாவுடன் இருக்கும் இந்த சகோதரிக்கு, இன் ஷா அல்லாஹ் மார்க்க வரம்புகளை சரி வர பேணி இலட்சியங்களை அடைந்துகொள்ள மனதார வாழ்த்துகின்றேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *