1737 : ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1882 : அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான்.
1886 : கனடாவுக்கு குறுக்கான முதல் ரயில் பயணம் மொன்ட்ரீயல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி போர்ட் மூடி நகரை அந்த ரயில் சென்றடைந்தது.
1905 : சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
1910 : இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
1912 : கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
1917 : முதல் உலகப் போரில் அச்சு நாடுகளுக்கு எதிராக கிரேக்கம் போர்ப் பிரகடனம் செய்தது.
1934 : ஹிட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை “நீள் கத்திகளுடைய இரவு” ஜேர்மனியில் நிகழ்ந்தது.
1937 : உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 : இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியினர் யுக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1944 : இரண்டாம் உலகப் போரில் செர்போர்க் சண்டை முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
1956 : அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனா மாநிலத்தில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1960 : பெல்ஜியத்திடம் இருந்து கொங்கோ சுதந்திரம் பெற்றது.
1971 : சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
1972 : ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
1985 : லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 : கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1997 : முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 : ஹொங்ெகாங்கின் அதிகாரத்தை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்தது.
2002 : உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 5 ஆவது தடவையாக பிரேஸில் சம்பியனாகியது.
2013 : அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கப் போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
2015 : இந்தோனேஷியாவில் இராணுவ விமானமொன்று சுமத்ரா பிராந்தியத்தின் குடியிருப்புப் பகுதியொன்றில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 22 பேர் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.