(பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து)
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடி, வறுமையை ஒழிப்பதில் இருநாடுகளும் கூட்டாக பாடுபட வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை இன்றும் இம்ரான் கானிடம் வலியுறுத்தினார்.
மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளங்கள் நிலவுவதற்கு வன்முறை மற்றும் பயங்கரவாதமற்ற சூழ்நிலையும், நம்பிக்கையுணர்வும் மிகவும் முக்கியம் என்றும் மோடி அறிவுறுத்தினார்.