எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற செயல்முறை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவதானம் செலுத்தி பெறுமதியான கலந்துரையாடல் நிமித்தம் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (04) சந்தித்தார்.
நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்றத்தினுள் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே இங்கு பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை பாராளுமன்றத்திற்கும் இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.