புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு சுமார் 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டைக் குறைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையின் போது இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இதனிடையே, புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
புகையிலை பயன்பாடு உடனடியாக மக்களை கொல்லாது. எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரியளவு நிதியை செலவிட வேண்டியுள்ளது.
இதன்படி, புகையிலை பயன்பாட்டால் பாதிக்கப்படுவோருக்காக சுமார் 204 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.