• Sat. Oct 11th, 2025

உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்

Byadmin

Jun 18, 2019

(உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்)

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி உள்ளது. 


இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி விழா நடைப்பெற்றது. இந்த விழா அரசு முறைப்படி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். 

அப்பகுதியில் உள்ள மிக உயரிய கம்பத்தில் இக்கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவில் டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் கலந்துக் கொண்டு கோலாகலமாக கொண்டாடினர். 

மேலும் டென்மார்க்கின் வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் அப்பகுதியில் கண்காட்சி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். முன்னதாக இந்த கண்காட்சியை டென்மார்க்கின் இளவரசர் ஃபெட்ரிக் மற்றும் அவரது மனைவி இளவரசி மேரி ஆகியோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *