(போலிக் குற்றச்சாட்டினை நிராகரித்த கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயம்)
தெரண டீவி நிகழ்ச்சி ஒன்றில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயகாரவினால் சவூதி அரேபியா தொடர்பில் முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டினை கொழும்பிலுள்ள சவூதி அரேபியா தூதுவராலயம் இன்று (03) புதன்கிழமை நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியா தூதுவராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இலகு கடன் அடிப்படையிலான நிதியுதவிகளும் திட்டங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
