(மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்)
மது போதையில் மோட்டார் சைக்கிள் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதவான்
நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது.
நேற்றைய தினம் மதுபோதையில், மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம், வரிப் பத்திரம் இன்றி பயணித்த நபர் ஒருவரை வவுனியா போக்குவரத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதி பத்திரம் இல்லாமல் பயணித்தமை, வரி பத்திரம் இல்லாமல் பயணித்தமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த நீதிமன்று உத்தரவிட்டது.