(இங்கிலாந்து குப்பைக்கு மேலதிகமாக பிரான்ஸில் இருந்து 150 குப்பை கொள்கலன்கள் இலங்கைக்கு ..)
தற்போது பேசுபொருளாக மாறியுள்ள இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பை
விவகாரம் தொடர்பிலான சர்ச்சை ஓயும் முன்னர் மற்றுமொரு விடயம் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து குப்பைக்கு மேலதிகமாக பிரான்ஸில் இருந்து 150 குப்பை கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளது.