தினமும் ஒரு கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் டயட்டை எப்படி பின்பற்றுவது என்று பார்ப்போம்.
லெமன் டயட்டின் நன்மைகள் என்ன?
லெமன் டயட்டை பின்பற்றுவதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் போன்றவை முற்றிலும் நீக்கப்படுவதுடன், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 8 கப்
எலுமிச்சை – 6
தேன் – 1/2 கப்
புதினா – 10 இலைகள்
ஐஸ் கட்டிகள் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் நீரை ஊற்றி, வெதுவெதுப்பாக சூடானதும், அதில் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் புதினா சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கி, குளிர வைத்து, ஃப்ரிட்ஜில் பல மணிநேரம் வைக்க வேண்டும்.
பின் இந்த பானத்தை ஒவ்வொரு முறை பருகும் போதும், ஒவ்வொரு கப்புடனும் 1 ஐஸ் கட்டி துண்டுகளை சேர்த்து குடிக்கலாம்.
காலை
காலை உணவாக ஃபுரூட் சாலட்டை சாப்பிட வேண்டும். அதை சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் லெமன் பானத்தைக் குடிக்க வேண்டும். பின் 11 மணிக்கு, மீண்டும் ஒரு டம்ளர் லெமன் ஜூஸை குடித்துவிட்டு, சிறிது பாதாமை சாப்பிட வேண்டும்.
மதியம்
மதிய வேளையில் 2 வேக வைத்த முட்டையுடன் சிறிது லெட்யூஸ் சாலட் சாப்பிட வேண்டும். அந்த லெட்யூஸ் சாலட்டில் மசாலாப் பொடிகள், ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்திருக்க வேண்டும்.
மாலை
மாலை 4 மணியளவில் மற்றொரு டம்ளர் எலுமிச்சை பானத்தை குடிக்க வேண்டும். அதன் பின் சிறிது பழங்களை சாப்பிட வேண்டும்.
இரவு
இரவில் க்ரில் மீன் அல்லது க்ரில் சிக்கனை சாப்பிட வேண்டும். பின் தூங்குவதற்கும் 2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் எலுமிச்சை பானத்தை குடிக்க வேண்டும்.
குறிப்பு
இந்த லெமன் டயட் முறையை 5 நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும் லெமன் டயட்டை பின்பற்றும் போது, ஆரோக்கியமற்ற அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்