• Sun. Oct 12th, 2025

Byadmin

Sep 16, 2019

(“பல்லின சமூகத்தின் முதுகலசம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்” )

சிறுபான்மையிலும், சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லீம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும், சூழலையும் மிகச்சரியாக புரிந்து கொண்டு, அந்த சமூகத்தின் பங்களிப்பின் மூலம் நாட்டினையும், பொருளாதாரத்தினையும் கட்டி எழுப்புவதன் மூலம் முஸ்லீம் சமூகத்தின் அடையாளத்தை உலகறிய வைத்த தீர்க்கதரிசனமிக்க பெருந்தலைவன் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்.

19 வருடங்கள் கழிந்தும் நினைவில் நின்றும் நீங்கா இடம் பிடித்த மாமேதையின் சிறாத்த தினம் இன்று. ஆதவன் எழுந்து வரும் கிழக்கின் சம்மாந்துறையில் கேற் முதலியார் பரம்பரையின் குடும்பத்தில் முகம்மது மீராலெப்பை ஹுஸைன் மற்றும் மதீனா உம்மா ஆகியோர்க்கு சிரேஸ்டமானவராக 23ஆம் திகதி அக்டோபர் 1948ஆம் ஆண்டு அவதரிதார்.


இலங்கை அரசியலில் தீவிர ஆர்வம் கொன்டிருந்த அஷ்ரப் அவர்கள் மொழியோடும், வாழ்வியலோடும் இரண்டரக்கலந்திருந்த தமிழ் சமூகத்துடன் நெருங்கிய உறவையும், தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் தந்தை செல்வநாயகத்துடனும் பலமான தொடர்பையும் பேணிவந்தார். காலத்தின் தேவையும், சூழலும் முஸ்லீம் சமூகத்தின் முகவரியின் அவசியமும் உணரப்பட்டு சிந்திக்க தலைப்பட்டதன் விளைவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் சமூக மேம்பாட்டு தேசிய இயக்கமாகும்.


1981ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி கிழக்கின் ஆதவனை நிறுவனமயமாக்குவதற்கான ஆரம்ப கூட்டத்தினை காத்தான்குடியில் நடாத்தி அங்குறாப்பனம் செய்து வைக்கின்றார்.
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் குறிப்பிடுவதைப்போன்று
தலைவர் அஷ்ரப் அவர்கள் “மஜ்லிஸ்” என்ற அமைப்பு ஒன்றை உறுவாக்கி இருந்தார்கள். அதில் பள்ளின சமூகத்தினை பிரதிபளிக்கும் வகையில் அங்கத்தவரகளையும் இணைத்திருந்தார்கள்.


அந்த மஜ்லிஸ் மூலம் சமூகம் சார்பான நல்ல பல செயற்திட்டங்களை கலந்துரையாடுவோதோடு நமக்கான கலாசாரத்தை நாமே தீர்மாணிக்க வேண்டும் என்ற கொல்கையில் உறுதிபட செயற்பட்டார் எனக்குறிப்பிடுகின்றார்.
பெரும்பான்மை சமூகம் தங்களை மொழியாலும் பாரம்பரியத்தினாலும் அடையாளப்படுத்துவதைப் போல் சிறுபான்மையிலும் பெரும்பான்மை சமூகம் தங்களது மொழியாலும் சம்பிரதாயங்களினாலும் அடையாளப்படுத்துவதைப் போல் முஸ்லீம் சமூகம் தங்களை தங்களது மார்க்கத்தால் அடையாளப்படுத்த வேண்டும்.


அதற்காக தங்களது மார்க்கத்தை தெளிவாக விளங்கி புரிந்து பள்ளின சமூகம் வாழ்கின்ற இலங்கை தேசத்திற்கு உரித்தான கலாசார விழுமியங்களை கட்டி எழுப்பி அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வாதத்தில் உறுதியாக இருந்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றார்.


அன்று தலைவர் அஷ்ரப் தூர நோக்குடன் சிந்தித்து முயற்சித்த அந்த புரிதலுடனான இருப்பை தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கின்ற போதுதான் சான் ஏற முழம் சருக்கிய கதையாக இன்று முஸ்லீம் சமூகம் பெரும் அபத்தத்தை தாங்கி நிற்கின்றது.
பிரதேசத்திற்கும், பிராந்தியத்திற்கும் சத்தியத்திற்கும் தங்களை தாங்களே தலைவர்கள் என்று மகுடம் சூட்டிக்கொண்டவர்கள், தேர்தல் மேடைகளிலும், தங்களை தாங்களே வரவேற்றுக் கொள்ளும் விழாக்களின் போதும், தங்களது கட்சிகளின் சின்னங்களை மறந்தாலும் பெருந்தலைவனின் போட்டோக்களை மறந்து விடுவதில்லை. 


அவ்வாரு நீங்கா இடம் பிடித்த இலங்கை முஸ்லீம் சமூகத்தின் தலைவன் மரணித்து 19 வருடங்கள் உருன்டோடிவிட்டன.
அன்னார் சுபசோபனம் அடைய பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *