(வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்)
இன்று காலை 6.40 மணியளவில் வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆடை விற்பனை நிலையம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு நாசகார செயலாக இருக்குமோ என அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.