• Sat. Oct 11th, 2025

ஐ எஸ் தாக்குதல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

Byadmin

Jul 2, 2017

இலங்கை அமெரிக்க தூதுவர் காரியாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில், இதுவரையில் எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் தமக்கு கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலவேளை, இந்த அறிவிப்பு அமெரிக்காவிலிருந்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விடுக்கப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியசட்சகர் ருவர் குணவர்தன இது தொடர்பில் குறிபிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ எஸ் இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று லங்கா தீப செய்திவெளியிட்டிருந்தது. MN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *