• Sat. Oct 11th, 2025

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை

Byadmin

Jul 2, 2017

முஸ்லீம் மக்களின் சம்மதம் கிடைக்கும் வரை வட கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மாகாணசபை அதிகாரப் பகிர்வின் அடிப்படை அலகு என்று அனைவராலும் இணங்கப்படுகின்றது. அது இடைக்கால அறிக்கையிலே வரும். அதோடு சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு சேர்ந்த ஒரு அலகாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என்றும் அவ் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு ஒரு அலகாக இருக்க வேண்டும் என்பது. இது இறுதியில் எப்படி அமையும் என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு மாகாணமும் இணங்கினால் தான் அந்த மாகாணங்கள் இணையக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. எனவே இந்த இணைப்பு உடனடியாக சாத்தியம் இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு இணைப்பு என்பது. என்னுடைய நிலைப்பாடும் அதுதான். ஆனால் தற்போது அந்த இணைப்பு சாத்தியம் இல்லை என்று கூறுவதற்கு காரணம் உண்டு. மாகாணங்கள் இணங்கினால்தான் இணைப்பு சாத்தியமாகும். தற்போது கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஆனால் எப்போதும் இந்ந நிலைப்பாட்டில் தான் முஸ்லிம் மக்கள் இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க தேவை இல்லை. அந்த நிலமை மாறும். முஸ்லிம்களும் சேர்ந்து வடக்கு கிழக்கு இணைப்பினை கோருகின்ற போது அவர்களுடன் எமது இணைப்பு புதுப்பிக்கப்படும்.

யுத்த காலத்தினால் இரு இணங்களுக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசல் ஒரு இரவில் மறைந்துவிடாது. இணைப்பு வேண்டுமென்று சொல்லுகின்ற நாங்கள் அவர்களுடனான இணைப்புக்கான உறவினை புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதனை விடுத்து வடக்கு கிழக்கு இணைப்பினை ஒரு கோசமாக சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. 13 ஆம் திருத்தம் பிரயோசனம் அற்றது. வடகிழக்கு இணைப்பு தேவை என்று கோசமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது நடமுறைக்கு வராது.

இருப்பினும் 13 ஆம் திருத்தத்தில் தான் வரலாற்றி முதல் முறையாக மாகாணங்கள் பகிரப்பட்டது. தற்காலிகமாக ஏனும் வடகிழக்கு இணைப்பு பற்றி சொல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *