(உயிரைப் பணயம் வைத்து போராடிய போது, யாரும் கோத்தபாயவிடம் கடவுச்சீட்டு கோரவில்லை)
நாட்டுக்காக போரிட்ட போது கோத்தபாய ராஜபக்சவிடம் எவரும் கடவுச்சீட்டு உண்டா என கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆட்சி பீடம் ஏற்றுவது என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரக்வான பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோத்தபாய தரப்பு எதிர்காலம் பற்றி பேசுகின்றது, சஜித் தரப்பு கடந்த காலம் பற்றி பேசுகின்றது, இதுவே இரண்டு தரப்பிற்கும் இடையிலான வித்தியாசமாகும்.
இரண்டு சீமெந்து மூடைகள் மட்டும் ஒருவருக்குத் தேவையென்றால் அவர் சஜித்திற்கு வாக்களிக்க முடியும்.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும். கோத்தபாயவிற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
போரின் போது உயிரைப் பணயம் வைத்து போராடிய போது யாரும் கோத்தபாயவிடம் கடவுச்சீட்டு கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.