• Sun. Oct 12th, 2025

“முஸ்லிம்கள் இனியும் ஏமாறமாட்டார்கள் – இம்முறை கோட்டாபயவிற்கே ஆதரவு” – ராஸிக் அன்வர்

Byadmin

Oct 1, 2019

(“முஸ்லிம்கள் இனியும் ஏமாறமாட்டார்கள் – இம்முறை கோட்டாபயவிற்கே ஆதரவு” – ராஸிக் அன்வர்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவு பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கே கிடைக்கும்.கடந்த முறை போன்று இம்முறை அவர்கள் ஏமாறப் ​போவதில்லை என பொதுஜன பெரமுன காலி மாவட்ட முஸ்லிம் அமைப்பாளர் ராஸிக் அன்வர் தெரிவித்தார். 
கடந்த காலத்தில் காலி மாவட்டத்தில் நாம் தோல்வியடைந்தாலும் இம்முறை அமோக வெற்றியீட்டுவோம் எனவும் அவர் தெரிவித்தார். 
பொதுஜன பெரமுன காலி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
மேலும் கூறிய அவர், பொய்பிரசாரங்கள் காரணமாக கடந்த காலத்தில் முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவில் இருந்து தூரமானார்கள்.ஆனால் தற்பொழுது அவர்கள் ஜ.தே.க அரசின் உண்மை சுயரூபத்தை அறிந்துள்ளார்கள்.இனியும் அவர்கள் ஏமாறப் போவதில்லை.
கோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல மக்களினதும் ஆதரவுடன் பெருவெற்றி பெறுவார். அவரின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும். குறிப்பாக காலி முஸ்லிங்கள் தமது ஆதரவை அளிக்க வேண்டும்.
இதற்காகவே என்னை காலி மாவட்ட பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்துள்ளார். 
விரைவில் இந்த காலி அலுவலகம் திறந்து வைக்கப்படும். முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ இதனை திறந்து வைப்பார்.
எதிர்கால கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழல் உருவாகும்.நவம்பர் 16 ஆம் திகதி கோட்டாபய வெல்வது உறுதி என்றார். 
காலி தேர்தல் தொகுதி பொதுஜன பெரமுன அமைப்பாளரும் காலி மாநர மேயருமான, பிரியந்த சஹபந்து தெரிவிக்கையில் இந்த ஆட்சியில் சிங்கள, முஸ்லிம் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.\
சகல மக்களும் ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்க்கின்றனர். சுபீட்சமான எதிர்காலமொன்றை உருவாக்க மஹிந்த ராஜபக்‌ஷ,கோட்டாபய ராஜபக்‌ஷ அடங்கலான தலைமைகளினாலே முடியும்.
நவம்பவர் 16 ஆம் திகதி புதிய அரசாங்கம் உருவாகும்.முஸ்லிம்கள் இனியும் ஏமாறமாட்டார்கள்.அவர்கள் இந்த வெற்றியில் பங்காளர்களாவது உறுதி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *