• Fri. Oct 24th, 2025

சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி!!

Byadmin

Oct 14, 2019

(சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி!!)

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடி சாற்றை பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு  கொடுக்கும்.சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது  நல்லது. சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும். சிலம் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கல். சிறிது வேலை செய்தாலும் அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால்  மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு  சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் குறைபாட்டை தடுக்க சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால்  எலும்புகள் வலுவடையும். சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப் பெறமுடியும். தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும். நரைமுடியைப் போக்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். வாய் புண்கள் ஏற்படும் பொது சாத்துக்குடி சாறு குடிப்பது நல்லது. வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உடனே  வயிற்றுப்போக்கு குணமடையும். இரத்த ஓட்டத்திற்கு சாத்துக்குடி ஜூஸ் பெரிதும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *