(“முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின்போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது ?”)
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளின் போது வாய்திறக்காத சஜீத்தை எவ்வாறு நம்புவது என ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் அஷ்ஹர் கேள்வி எழுப்பினார். நேற்று ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் பெரமுன எற்பாடு செய்த மக்கள் சந்திப்புக்கள் கண்டி மாவடத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா பொது ஜன முஸ்லிம் பெரமுன கண்டி மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ் அஷ்ஹர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அலுத்கமை பிரச்சினையை காரணம் காட்டியே நாம் இந்த நல்லாட்சியை கொண்டுவந்தோம்.ஆனால் இந்த அரசாங்கம் கிந்தோட்டை முதல் மினுவொங்கொடை வரை இடம்பெற்ற கலவரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுமில்லை. குற்றவாளிகளை தண்டிக்கவும் இல்லை.மாறாக முஸ்லிம்களை உசுப்பேற்றி அரசியலே செய்தது. கிந்தோட்டை முதல் திகனை வரை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச வாய் திறக்கவில்லை.தேர்தல் நெருங்கியது திடீரென கோமாவில் இருந்து விழித்துக்கொண்டவர் போல தற்போது நல்லிணக்கம் பற்றி பேசுகிறார்.இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஒருவரை நாம் எவ்வாறு நம்புவது ? எனவே முஸ்லிகள் 2015 இல் விட்ட தவறை மீண்டும் விட்டுவிடாமல் புத்திசாலித்தனமாக சிந்தித்து வக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.