(யாழ்ப்பாணத்தில் களத்தில் குதித்துள்ள நாமல் ராஜபக்ஸ)
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நாமல் ராஜபக்ஷ சிறிலங்கா பொதுஐன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஈழமக்கள் ஐனநாயக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் ஏற்பாடு செய்யும் பிரச்சாரம் கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். இதற்கமைய இக்கட்சிகளின் ஏற்பாட்டில் நேற்றும் பல்வேறு பிரச்சார கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேபோன்று இன்றும் வலிகாமம் தெற்கு பிரதேச எல்லைக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியல் இடம்பெற்ற பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார். பொதுஐன பெரமுனவின் ஏற்பாட்டில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பாகவும் நாமல் ராஜக்ஷவிடம் மக்கள் எடுத்து கூறியிருந்தனர். அத்தோடு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் நாமல் ராஐபக்ஷவிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.