(“கோட்டாபய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்” – ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில்)
கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பில் (17) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தால் கொழும்பு மாநகர சபையில் உள்ள பாதைகளை கூட செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.