(பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.)
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.