• Sun. May 24th, 2026

கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த

Byadmin

Oct 21, 2019

(கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த)

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைக்க பெற்ற சகல வாக்குகளையும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக பயன்படுத்த வேண்டியது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களது பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வலியுறுத்தலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க விடுத்துள்ளார்.
தங்கள் தரப்பில் உள்ள சிலருக்கு இன்னும் மொட்டு சின்னத்தின் உறுப்பினர்களுடன் இணைத்து செயற்பட மிக கடினமாக இருக்கும்.
எனினும், அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினருக்கு உள்ளது.
இதன்காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெற்று கொண்ட சகல வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொருளாளர் பதவிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று சபை கூடிய போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக அந்த பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *