(மர்மமாக உயிரிழந்த 13 வயது சிறுவன்.. சந்தேகத்தில் 22 வயது இளைஞன் கைது.)
13 வயதான சிறுவன் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்காலை, கட்டுவன பகுதியில் உயிரிழந்த சிறுவன் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும் பொலிஸாரின் விசாரணையில் இது தற்கொலை அல்ல எனவும், சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மரணத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 22 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நாளைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.