(கோட்டாபய ஆதரிக்க சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தீர்மானம்)
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளுகின்ற சாய்ந்தமருது கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிகளவான பொலிஸார் வெளிஇடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை(24) 3 பேருந்துகளில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 150க்கும் அதிகமான பொலிஸார் குறித்த கூட்டத்திற்கு பாதுகாப்பிற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்ட ஒழுங்கு முறைகளை ஆராயும் முகமாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.ஏ .சூரியபண்டார தமைமையில் விசேட ஒழுங்குமுறை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சாய்ந்தமருது பிரதேச சபையை வலியுறுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிக்க சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் சுயேட்சை குழுவினர் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.