(“முஸ்லிம்கள் அஞ்ச வேண்டாம், பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்” – கோட்டாபய)
THE TURNING POINT எனும் தொணிப் பொருளில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து இன்று இரவு கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் ஒன்று கூடிய பெருமளவான முஸ்லிம் பிரதிநிதிகளும், மக்களும் எதிர்வரும் தேர்தலில் தமது ஆதரைவத் தெரிவித்துள்ளனர்.
பிரதம அதிதியாக கோட்டாபாய ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார் அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரவீர, பைஸர் முஸ்தபா, மேல்மாகாண சபையின் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஸப்ரி, ராசிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்க்ஷ உரையாற்றுகையில்
தான் ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், இனவாதம், மதவாதம் என்பனவற்றிற்கு இடமில்லை என்றும், அணைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு சூழல் உருவாக்கப்படும் என்றும், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முஸ்லிம் மக்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்ததுடன் இன்று இங்கு கூடியுள்ள முஸ்லிம்களைப் பார்க்கும் போது எனது வெற்றி உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவத்தார்.
