(கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரச்சாரம்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து கல்முனை தொகுதியில் நேற்று (03) தேர்தல் பிரச்சாரமொன்று இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தகர் அகமட் புர்கான் தலைமையிலான ஆதரவாளர்களினால் கல்முனை பொதுச்சந்தை நகரின் வியாபார நிலையங்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாகச்சென்று துண்டுப்பிரசுரங்கள் ,கையேடுகளை வினியோகித்தனர்.