• Sat. Oct 11th, 2025

“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய

Byadmin

Nov 5, 2019

(“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய)

நாட்டில் எங்கு சென்றாலும் நாட்டு மக்கள் தன்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தாமே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் புலனாய்வு பிரிவினரை உசாராக வைத்திருந்தோம். ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள், புலனாய்வு துறையினரை எம் பின்னால் அனுப்பி வைத்தார்கள் எம்மைப்பற்றி துப்பறிய.
அதேபோல மாவனெல்ல சம்பவம் குறித்து பார்க்கும் போது நாம் கூறினோம், அது இனவாதிகளின் செயல் என்று. ஆனால் இவர்கள் இரண்டு அப்பாவி தமிழ் இளைஞர்களை கைது செய்து அது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல் என்று கூறினார்கள்.
அதனை சரியாக செய்திருந்தால் ஏப்ரல் 21 தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம். நான் கூறி கொள்ள விரும்புகிறேன். நாட்டின் பாரிய யுத்தத்தை முடித்த எமக்கே நாட்டின் பாதுகாப்பை பலப்படுதத முடியும்.
நீங்கள் காலிமுகத்திடலை பாருங்கள் அங்கு உள்ள புதிய கட்டடங்கள் அனைத்தும் எமது ஆட்சியின் போது கட்டியெழுப்பப்பட்டவை. எனவே நாமே நாட்டையும், பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடியவர்கள்.
நான் நாட்டையும் பாதுகாத்து பொருளாதாரத்தையும், கட்டியெழுப்புவேன் என சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *